நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 9-11 மாணவர்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு பொதுத் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 12 மாதங்களுக்கு மட்டுமே 3ஆம் தேதி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் 9,10,11, ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதற்காக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் -1 க்கு பின்னர் மாணவர்களுக்கு வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளது.