Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பெட்ரோல் குண்டு தாக்குதல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரின் மோட்டார் சைக்கிளை எரித்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சி 56 வது வார்டு அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் வெளியே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து அதிகாலை 4 மணி அளவில் இவரது வீட்டின் மேற்கூரை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் காளிராஜ் மற்றும் வெங்கடேஷ் என்ற இரண்டு வாலிபர்கள் முருகேசனின் மோட்டார் சைக்கிளை எரித்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |