Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்தல் தங்கமா….? மிளகு ஸ்பிரே அடித்து கொள்ளை…. விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!

சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த அரை கிலோ தங்கம், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மூன்று விலை உயர்ந்த செல்போன்களைத் மர்ம நபர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அருணாச்சலம் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நாகூர்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண் மற்றும் சிறுமியுடன் காரில் வந்தபோது திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் நாகூர்கனி, அந்த இளம்பெண் மற்றும் சிறுமியின் முகத்தில் மிளகு ஸ்ப்ரேயால் அடித்து விட்டு அவர்களிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், அரைக்கிலோ தங்கம் மற்றும் 3 விலை உயர்ந்த செல்போன்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் ஒரு நபர் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

அந்த நபர் தான் நாகூர்கனி, இந்த சிறுமி, இளம் பெண் என மூன்று பேரையும் கணவன் மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தையாக நடிக்க வைத்து சார்ஜாவுக்கு தங்கம் கடத்தி வர அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் சார்ஜாவில் இருந்து அரை கிலோ தங்கம், விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை கடத்தி சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் அங்கிருந்து காரில் சாலி கிராமத்திற்கு வந்து இறங்கியவுடன் இவர்களைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மிளகு ஸ்ப்ரே அடித்து விட்டு தங்கம், பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |