ஹிந்தி நடிகையின் பொறுப்பற்ற செயலை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் கவுஹர் கான். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுரித்தினர். ஆனால் கவுஹர் கான் இதனைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனால் விதிகளை மீறி படப்பிடிப்புக்கு சென்ற நடிகையின் மீது மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.மேலும் ரசிகர்கள் பலரும் இவரது பொறுப்பற்ற செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.