Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு தானே போனேன்…. கையும் களவுமாக பிடிபட்ட நபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்கவுண்டனின் செட்டிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை மாணிக்கம் பாளையம் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது செந்தில்குமாரின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து மோட்டார் சைக்கிளை திருட முயன்ற அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்து விட்டனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அந்த நபரை அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே மாவட்டத்தில் வசித்து வரும் மணிவண்ணன் மகேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |