உரிய ஆவணம் இன்றி இரும்பு கடை வியாபாரி கொண்டு சென்ற 4 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் 4 லட்ச ரூபாய் zஇருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் அப்பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பதும், இரும்பு வியாபாரம் செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த பணத்தின் உரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்ட போது சக்திவேலிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால் 4 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.