சிறுத்தையிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்ற முயன்ற ஆட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு வயது ஆட்டுக்குட்டியை அதிகாலை 4:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று வேட்டையாட முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் தனது குட்டியை சிறுத்தை வேட்டையாடுவதை பார்த்த தாய் ஆடு சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் போது, சிறுத்தை கடித்ததால் தாய் ஆட்டின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் குட்டி ஆடு இறந்து விட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை அரசு கால்நடை மருத்துவர் மெய்யரசன் சம்பவ இடத்திற்கு வந்து தாய் ஆட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் மூலம் இறந்து போன குட்டியை பிரேத பரிசோதனை செய்து புதைத்துவிட்டனர். இதனை தொடர்ந்து வனவர் முனியாண்டி தலைமையில் வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆரோக்கிய ராஜின் உத்தரவின்படி சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்