Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை…. அலர்ட்…. உஷ்… உஷ்….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வெளுத்து வாங்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர், இளநீர் மற்றும் மோர் போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் எடுக்க வேண்டும். வெளியில் செல்லும்போது குடையைக் கொண்டு செல்ல வேண்டும்.

Categories

Tech |