ஒரத்தநாட்டில் முகநூல் காதலால் கால்நடை கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிர்இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது 20 வயது மகள் இந்துமதி இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரியில் 3ஆம் வருடம் கல்லுரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.எப்பொழுதும் மொபைலும் கையுமாக அலையும் இந்துமதி முகநூல் சார்டிங்கில் மூழ்கி கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை அடுத்த டி. புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது நட்பு கிடைத்தது .
இதையடுத்து அவர் தன் வித்தியாசமான புகைபடங்களை பதிவிட்டு தன்னை ஒரு பொறியாளர் என அறிமுகபடுத்தி கொண்டு காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் .வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் 2 வருடம் முகநூலில் காதலித்து வந்தது மட்டும் இல்லாமல் நேரில்சந்தித்து வந்துள்ளனர் . காதலை வளர்த்து ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படிப்பதாக கூறிக்கொண்டு சதிஷ்குமாருடன் உரத்தநாடு எழுத்துகாரா தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார் .அங்கிருந்து கல்லூரிக்கும் சென்று வந்த நிலையில் சதீஷ்குமார் வேலைக்கு சரிவர செல்லாத குடிகாரன் என தெரிய வந்தது .
மேலும் அவர் பொறியாளர் அல்ல எலெக்ட்ரிசியன் என்பது தெரியவந்தது .இந்நிலையில் தினமும் வீட்டுக்கு குடிபோதையில் வருவதை வாடிக்கையாக வைத்திருத்தத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது .தங்கள் மகள் கல்லூரியில் படிக்கிறாள் என்று மாதமாதம் பணம் அனுப்பி வைக்க இந்துமதி திருமணம் செய்துகொண்டு கணவருடன் வாழ்வது பெற்றோருக்கு தெரியவில்லை. அதிலும் விடுதியில் தங்கி இருப்பது போல் அவ்வப்போது ஊருக்கு சென்று வந்ததால் பெற்றோருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஞாயிறு கிழமை அன்று சதீஷ்குமார் குடிபோதையில் இந்துமதியை அடித்து உதைத்ததால் மனஉளைச்சல் அடைந்த இந்துமதி தான் தேடி கொண்ட வாழ்க்கை தன்னை படுகுழியில் தள்ளிவிட்டதாக எண்ணி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது .ஆனால்இந்துமதியின் பெற்றோர் சதிஷ் குமார் தான் மகளை அடித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இதையடுத்து மருத்துவமாணவி கொலை செய்ய பட்டாரா ? இல்லை தற்கொலையா ? என காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர் .