Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் இரு கொள்ளைச் சம்பவம்…. உரிமையாளர்கள் குமுறல்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மதுரையில் மர்ம நபர்கள் ஒரே நாளில் இரண்டு கடைகளில் கொள்ளையடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் மேலூரில் மானக்சா என்பவர் ஐஸ்கிரீம் கடையும் அதே பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வெடிக்கடையும் நிறுவி வந்துள்ளார்கள் . இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சென்று இரு கடைகளின் பூட்டையும் உடைத்ததையடுத்து ஐஸ்க்ரீம் கடையிலிருந்து ரூபாய் 9 ஆயிரத்தையும் வெடி கடையிலிருந்து ரூபாய் 20000 கொள்ளையடித்து சென்றனர் .

இதனைத் தொடர்ந்து ஐஸ்க்ரீம் கடை உரிமையாளர் மானக்சா என்பவரும் வெடி கடை உரிமையாளர் ஆசை தம்பியும் சேர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் . அப்புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தினை செய்தவர்கள் ஒரே கும்பலா இல்லையேல் தனித்தனி கும்பலா என்ற கண்ணோட்டத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |