அமெரிக்காவில் குழந்தை தூங்கும் கட்டிலுக்கு அருகில் ஒரு உருவம் தெரிவதைக் கேமரா காட்சிகளில் பார்த்த குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்தவர் டோரி மெக்கன்சி (வயது 41). இவருக்கு ஆம்பேர் (2 வயது) மற்றும் மைக்கேல் என்ற பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மெக்கன்சி தனது பேரக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆம்பேர் என்ற சிறுமி நள்ளிரவில் கிட்ட வராத, தள்ளிப்போ என்று திடீரென கத்தியதை அந்தப் பெண்மணி கவனித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்மணி குழந்தை ஏன் இப்படி கத்தினாள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக அந்த அறையில் பொருத்தப்பட்டு இருந்த கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அந்த கேமரா காட்சிகளில் குழந்தைகள் தூங்கும் கட்டிலுக்கு அருகே தலையில் பெரிய கொம்புகளுடனும், கையில் நீண்ட நகங்களுடனும் ஒரு உருவம் நிற்பதைக் கண்டு அந்த பெண்மணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அந்த குழந்தைகளை அவர்கள் பெற்றோர் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று தூங்க வைத்துள்ளார். மேலும் நடந்தது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த உருவத்தை எப்படியாவது வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை அந்தக் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமி அந்த உருவத்தை தனது நண்பனாக கருதி வரும் நிலையில், பெரியவர்கள் எல்லாரும் அதை நினைத்து கடும் அச்சத்தில் உள்ளனர்.