Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா… கொரோனா காலத்தில்… பில்லியன் கணக்கில் சம்பாதித்தார்களா…? பணக்காரர் பட்டியல் வெளியீடு …!!!

கொரோனா தொற்றால்  உலக நாடுகள் அனைத்தும், பொது முடக்கத்தால்  அடைக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்கள் ,தன் சொத்துக்களை பல மடங்கு அதிகரித்து கொண்டனர்.

இது பற்றி அந்நாட்டின் நாளிதழான வாஷிங்டன் போஸ்டில்   செய்தி வெளியாகியது.சுமார் 360 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தனர் .இந்த வகையில் முதலில் இருப்பது அமேசான் நிறுவனரான பெசாஸ் மற்றும் டெஸ்லாவின் நிறுவனரான  எலான் மஸ்கு முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்   சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்  சம்பாதித்து உள்ளார்.

கூகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் லேரி பேஜ் மற்றும்  செர்ஜி பெரின்  இருவரும் சுமார் 65 பில்லியன் டாலர்களை இந்த கொரோனா காலத்தில் அதிக லாபத்தை ஈட்டினர். அமேசான் நிறுவனமானது இந்த கொரோனா நோய்தொற்று  காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் வர்த்தகம் அதிகமாக செய்ததால் ,இதில் பலத்த லாபத்தை ஈட்டியதன் காரணமாக முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து யாஹூ பினான்ஸ் நிறுவனம், ஆரேக்கேல் லேரி எல்லிசான், டெல் தொழில்நுட்பத்தில் தலைமை செயல் அதிகாரியான  மைக்கேல் டெல் போன்றோர் தனது சொத்துக்களை இரு மடங்காக அதிகரித்து கொண்டனர் .

Categories

Tech |