Categories
உலக செய்திகள்

காரிலேயே காலத்தை ஓட்டிய ஆசிரியர்… முன்னாள் மாணவனின் பரிசு… இன்ப அதிர்ச்சியில் ஆசிரியர் …!!!

முன்னாள் மாணவர் ஒருவர் தங்க இடமில்லாமல் இருந்த தன்னுடைய ஆசிரியருக்கு ரூபாய் அவருடைய பிறந்தநாளுக்கு  பரிசாக 27 ஆயிரம்   டாலர்   அளித்துள்ளார் .

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர்  ஜோஸ் வில்லர்ரூயல் . இவர் இங்கு ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு உலகை ஆட்டிப்படைத்த கொரோனா நோய்த்தொற்றானது பெருமளவு  பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளிலும் மக்கள் வேலை இன்றி, பணவசதி இல்லாமல் காணப்பட்டனர்.நோய் தொற்று  காரணமாக  உலகில் உள்ள அனைத்து பள்ளி ,கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஆசிரியர் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் ஜோஸ்க்கு  குறைந்த அளவே வருமானம் வருவதால்,  சம்பாதிக்கும் பணத்தை மெக்சிகோவில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மாதந்தோறும் அனுப்பி வைப்பார்.

இதன் காரணமாக  வாடகைக்கு வீடு எடுத்து தங்க பணவசதி இல்லாமல் ,தன் காரிலேயே காலத்தை ஓட்டினார். இந்நிலையில் இவரை முன்னாள் மாணவரான  ஸ்டீவன் நாவா என்பவர் ஒரு நாள் ஆசிரியரின் காரில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டிருப்பதை  ஆசிரியர் பார்த்துள்ளார். அந்த மாணவன் கூறுகையில், நான் அதிகாலையளவில் வேலைக்கு செல்லும் போது  ஆசிரியரை தினமும்  பார்ப்பேன். அவர் கஷ்டப்படுவதை புரிந்து கொண்ட நான் GoFundMe என்ற  நிதி திரட்டும் அமைப்பை தொடங்கி ,அதன் மூலம் ஆறே நாட்களில் சுமார் 27 ஆயிரம் டாலர்கள் திரட்டி உள்ளதாக கூறினார் . இந்த பணத்தை ஆசிரியரின் 77வது பிறந்த நாளில் அவருக்கு பரிசாக மாணவன் நவா இதை வழங்கினார். இதைக் கண்ட ஆசிரியர் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மகிழ்ச்சி பூரித்து காணப்பட்டார்.

Categories

Tech |