பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகிறது. இது போன்று அரசு துறையில் உள்ள பல்வேறு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதையடுத்து வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்ட்டுள்ளது. பொதுமக்களும் ஏடிஎம் களில் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படாது என்றும், பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலம் மற்றும் ஓய்வூதியம் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.