தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. ஒரு சில கட்சிகள் கூட்டணியுடன் ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தனித்தும் போட்டியிட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் வேட்பாளர்கள் மக்களை கவரும் வண்ணம் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் பேசிக்கொண்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன், “ஒரு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 4,500 முதல் 5,000 வரை இருக்கிறது. இதனால் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று பேசியுள்ளார். இதைக்கேட்ட கூட்டத்திலிருந்த மக்கள் சிலிண்டர் விலை கூட தெரியாமல் ஒரு அமைச்சரா? என்று அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.