Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. சட்ட விரோதமாக செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.புதுப்பட்டி கோத்தகிரி பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக குருநாதன், அழகர்சாமி, முத்தையா, பொன்குமார் மற்றும் ராஜ்மன்னார் போன்ற 5 பேரை துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |