Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமாவை விட்டு வெளியேறுகிறேன்…. தனுஷ் பட நடிகை அதிர்ச்சி தகவல்…!!

தனுஷ் பட நடிகை சினிமாவை விட்டு வெளியேறப் போவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான “நெஞ்சில் துணிவிருந்தால்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின். இதை தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்திலும், விஜய் தேவர்கொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மெஹ்ரினுக்கும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பஜன்லாலின் பேரனான பவ்யா பிஷ்னோத் என்பவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இவர் திருமணத்திற்குப் பின் மீண்டும் படத்தில் நடிப்பாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகுவதாக மெஹ்ரின் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தனது கணவரோடு டெல்லியில் குடியேற போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இவர் தற்போது வருண் தேஜாவுடன் நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படமே மெஹ்ரினின் கடைசி படமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |