26 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் தங்களது கருவினை கலைக்க விரும்புவார்கள். அப்படி 20 வாரங்கள் வரை கருவை கலைப்பதற்கு சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவினை 24 வாரங்கள் ஆக உயர்த்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் 24 வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்ப்பட்ட இந்த மசோதா நிறைவேறியுள்ளதன் காரணமாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமிகள் மற்றும் வல்லுறவின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலனளிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.