Categories
அரசியல் மாநில செய்திகள்

1ரூபாய் கூட கொடுக்கல…! ஒண்ணுமே நடக்கலைனு சொல்லுறாரு… இது சரித்திர சாதனை …!!

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாக்கு சேகரித்து பரப்புரை செய்த முதலவர், மக்களுக்கு சோதனையான நேரம், கொரோனா வைரஸ் தொற்று நேரம். வாழ்வாதாரம் இழந்து இருக்கின்ற மக்களுக்கு, அம்மாவுடைய அரசு ரேஷன் கடையில் ஏப்ரல், மே ,ஜூன், ஜூலை 4 மாதங்களில் விலையில்லா அரிசி, விலை இல்லா பருப்பு, விலை இல்லா சர்க்கரை, விலை இல்லா எண்ணெய் கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததும் அம்மாவுடைய அரசுதான்.

மக்கள் துன்பம் படுகின்ற போது ,வேதனைப் படுகின்ற போது, கஷ்டப்படுகிற போது  மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்து அதிலிருந்து காக்கக்கூடிய ஒரே அரசாங்கம் மாண்புமிகு அம்மாவுடைய அரசாங்கம். இந்த கிராமம் சூழ்ந்த பகுதியில் தை பண்டிகை வந்தாலே ஒரு மகிழ்ச்சியான அந்த பண்டிகை. அந்தத் தை  பண்டிகை எல்லா இளைஞர்களையும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக , எல்லா அரசு குடும்ப அட்டை களுக்கும் 2500 ரூபாய் நான் வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட இந்த குடும்ப அட்டைக்கு வழங்கிய சரித்திரம் கிடையாது. ஆனால் மாண்புமிகு அம்மாவுடைய அரசாங்கம் இன்றைக்கு மக்களுக்கு அரிசி, குடும்ப அட்டைக்கு 2500 ,முழு கரும்பு, துவரம் பருப்பு ,பொங்கல் தொகுப்பு கொடுத்து தை  பண்டிகையை இல்லத்திலே  மகிழ்ச்சியாக கொண்டாட வைத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுக்கவில்லை.

ஆனால் மக்கள் கஷ்டப்படுகிற போது கஷ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக, இந்த திட்டத்தை கொடுத்தோம். இப்படி எல்லா வழிகளிலும் மக்களுக்கு நன்மை செய்தேன். ஒருத்தருக்கு மட்டும் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் ஒண்ணுமே நடக்கல, ஒண்ணுமே நடக்கலைனு ஸ்டாலின் சொல்லுறாரு என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |