Categories
உலக செய்திகள்

நீங்க நல்ல தூங்கணுமா…? அப்போ இதே மாதிரி வேலையெல்லாம் பாக்காதீங்க… ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்- னின் சகோதரி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் ஜப்பானில் உள்ள டோக்கியோவிற்கும் தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற பகுதிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் சீனாவிற்கு எதிராக ராணுவ கூட்டணியை ஒன்று திரட்டுவதையும் ,  வடகொரியாவுக்கு எதிராக ஒரு பலமான அணியை திரட்டுவதையும் நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் கடந்த வாரம் ஒன்றாக இணைந்து ராணுவ பயிற்சியை மேற்கொண்டது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட்  டிரம்பிற்கு பிறகு அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் பற்றி இதுவரை வடகொரியா எந்தவித கருத்தையும் வெளியிடாமல் இருந்த நிலையில் கிம் ஜாங் உன்- னின் சகோதரி மற்றும் முக்கிய ஆலோசகரான கிம் யோ ஜோங் -கின் அறிக்கையை அந்நாட்டு அதிகாரபூர்வ செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

அதில், ” எங்களுடைய நிலத்தில் துப்பாக்கி வாசனையை பரப்ப  நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தான் இந்த அறிவுரை. அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இதுபோன்று வேலையை செய்யாமல் இருப்பது தான் சிறந்தது. அதை மீறியும் நீங்கள் இது போன்ற செயலை மேற்கொண்டால் அது உங்களுடைய தூக்கத்தை கெடுக்கும்” என்று எச்சரித்துள்ளார். ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா தான் எனது நாட்டின் “முதல் எதிரி” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |