சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல்-6 ஆம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல்-6 ஆம் தேதியன்று தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.