Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு.. 3 அடிக்கு குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகள்.. 75,000 விமானங்கள் ரத்து..!!

அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் உள்ள சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. 

கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இருக்கும் வயோமிங், உட்டா, கொலராடோ போன்ற மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் முழுவதுமாக பனிக்கட்டிகளால் முழ்கியதோடு, மக்கள் வெளியில் நடமாட முடியாத வகையில் வீடுகள், கார்கள் மற்றும் மரங்கள் என்று அனைத்திலும் பனிப்போர்வை சூழ்ந்திருக்கிறது.

இந்நிலையில் பனிப்புயல் வீசியதில் கொலராடோ மாகாணத்தில் மூன்று அடி உயரத்திற்கு பனி பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் வயோமிங் மாநிலத்தின் தலைநகர் செயேனியில் மதிய நேரம் வரை மட்டும் 60 சென்டி மீட்டர் அளவிற்கு பனி படர்ந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள், சாலை முழுவதும் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பனியுடன் கூடிய சூறாவளி காற்றும் கடுமையாக வீசுகிறது. எனவே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் 75 ஆயிரத்திற்கும் மேலாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |