இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கொக்கி, லாடம், மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார் .
#Idhayame, an emotional track about the heart-warming bond between man and his elephants – out now!!
LINK – https://t.co/mN4xciRkRo
Witness their beautiful bond in #Kaadan in theatres, 26th March onwards.#SaveTheElephants #Kaadan #InTheatresOn26thMarch pic.twitter.com/kvIWiajglA
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) March 16, 2021
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் வருகிற மார்ச் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘இதயமே’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.