Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேர்தலை புறக்கணிப்போம்” அது இருந்தும் பயனில்லை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோபமடைந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடித்த பின்பும் குடிநீர் வசதி செய்து தரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கூறியுள்ளனர். அதற்கு காவல்துறையினர் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |