Categories
உலக செய்திகள்

இறந்த நிலையில் தாயின் புகைப்படம் … வெளியிட்ட தொலைக்காட்சியிடம்… மகன் ஹரி பேட்டிக்கு கண்டித்த வரலாற்றாசிரியர் …!!!

இளவரசர் ஹரி ,தன்னுடைய தாய் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு  மீண்டும் எப்படி பேட்டி கொடுக்க முன்வந்தார், என ராஜ குடும்ப வாழ்க்கை வரலாற்றாசிரியர்  கேள்வி எழுப்பினார்.

பிரித்தானிய நாட்டின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி.இவர் சமீபத்தில் CBS தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ,அவர் மனைவி மேகனுடன் பேட்டியளித்தார் . ஆனால் 1997 ஆம் ஆண்டு  இவரது தாயான இளவரசி டயானா ,கார் விபத்தில்  சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அந்த நிகழ்வை CBS என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. இதற்காக CBS தொலைக்காட்சி மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று இத்தாலிய நாட்டு பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, மீண்டும் இந்த புகைப்படங்களை  வெளியிட்டது. அதற்கு இரு இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹரி இருவரும் நிறுவனத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனால் தற்போது ஹரி அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து விட்டதற்காக, எவ்வாறு பேட்டி கொடுக்க முடிந்தது என்று ,Hugo vickers என்ற ராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர் தெரிவித்தார். இதற்காக ஹரி -மேகன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |