அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கு தண்ணீரும் மின்சாரமும் தருவார்களா ? என நடிகை கஸ்தூரி ஆளும் கட்சியினருக்கு நையாண்டியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
தோல்வி பயம் காரணமாக அதிமுக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளனர். குறிப்பாக அனைவருக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாஷிங் மெஷின் கொடுப்பார்களாம்…
அதுக்கு தடையில்லாமல் குழாயில் தண்ணீரும், மின்சாரமும் எப்போது கொடுப்பார்கள் ? என நையாண்டியாக கேள்வி எழுப்பி உள்ளார். டேங்கர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்வார்களா ? என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கேலி செய்துள்ளார்.
இன்றும் தனியொருத்தியாக வீட்டுவேலைகளை கவனித்து விட்டு ஷூட்டிங் செல்கிறேன். 9 to 9 work.
சிக்கனமாக வீட்டை நடத்தி என் சம்பாத்தியத்தை தர்ம காரியங்களுக்கு செலவு செயகிறேன்.
3) continued— Kasturi (@KasthuriShankar) March 16, 2021