நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ,நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமந்தா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் நட்சத்திர நாயகியாக வலம் வருகிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டது .
இந்தப் படத்தில் இளம் நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடிக்கிறார் . இந்நிலையில் சகுந்தலம் படத்தின் பூஜையில் நடிகை சமந்தா அழகிய புடவை அணிந்து சென்றுள்ளார் . மேலும் அவர் ஏராளமான புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது ரசிகர்களை கவர்ந்த அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.