Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி மாணவர்களுக்கு – அதிரடி உத்தரவு …!!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஒன்றே கால் ஆண்டுகளாக மிரட்டி வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறையத் தொடங்கிய தொற்று தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்க தொடங்கியுள்ளது.

பல பகுதிகளில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தடுப்பு நடவடிக்கைகளையும்,  பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதிசெய்யவேண்டும், பள்ளி மாணவர்கள் யாருக்கும் அறிகுறி இருந்தால் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு தொற்று இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |