கிட்டத்தட்ட ஒன்றேகால் ஆண்டுகளாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தற்போது மேலும் உக்கிரம் எடுத்துள்ளது. இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை என அடுத்தடுத்து கொரோனாவின் தாக்கத்தில் உலக நாடுகள் சிக்கித் தவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து தற்போது மீண்டும் வேகம் எடுக்க வைத்துள்ளது மத்திய மாநில அரசுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வாதோரா ஆகிய பகுதிகளிலும், பஞ்சாப் மாநிலம் ரூத் நகர் மாவட்டத்திலும் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு ஊரடங்கு அமல் ஆகலாம் என்று கூறப்படுகிறது