Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பேருக்கு ஏத்த மாதிரி…. பெரிய நன்மைகள் இருக்கு”…. கட்டாயம் சாப்பிடுங்க… பல நோய்கள் குணமாகும்..!!

சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க இது மிகச் சிறந்த மருந்து. இது ஒன்றரை குவளை தண்ணீரில் சேர்த்து ஒரு குவளை தண்ணீர் வரும் வரை நன்றாக சுண்ட கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். நீண்டநாள் இருமல் ஜலதோஷம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளுக்கு இந்த பெருஞ்சீரகம் நல்ல பலன்தரும். பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது அடிவயிற்றில் வலி மற்றும் அதிக ரத்த கசிவு ஏற்படும்போது இதை சாப்பிட்டால் வலியை கட்டுப்படுத்த மிக உகந்ததாக இருக்கும்.

மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் வலிமை மற்றும் பால் சுரப்பில் பிரச்சினை ஏற்படாது. இத்தகைய பயன்களை கொண்ட பெருஞ்சீரகத்தை வீட்டில் வைத்து நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். அதுமட்டுமின்றி நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து பொருளும் ஒரு இயற்கை குணங்கள் கொண்டவையே.

Categories

Tech |