கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோரத்தாண்டவமாடி வந்த கொரோனா சற்று குறைந்தது. இதையடுத்து தற்போது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறிவைத்து வேகமெடுத்து வருவதால் பெற்றோர்களிடையே அச்சம் நிலவியுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் யாருக்காவது தொற்று அறிகுறி இருந்தால் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு தொற்று இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.