சுசுகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது பெர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது..
சுசுகி மோட்டார் நிறுவனம் தனது பெர்க்மான்ஸ் ட்ரீட் 125cc மோட்டாரை மேட் பிளாக் நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய நிறத்தில் உள்ள ஸ்கூட்டர் 69, 208(ex-ஷோரூம்)ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான பெர்க்மன் ஸ்ட்ரீட் ஏற்கனவே வெளி வந்த நிலையில் தற்போது மேட் பிளாக்நிறத்தில் வெளிவந்த நிறத்தை தவிர வேறு ஏனத மாற்றமும் செய்ய பட வில்லை.
பெர்க்மான்125cc ஸ்கூட்டரில் 124.3 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளதால்,8.5 பி.ஹெச்.பி பவர் மற்றும் 10.2 என்.எம். டார்கியூ செயல்திறனை வெளிப்படுத்தும் திறனாக விளங்குகிறது.சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசியில் அதிக ஸ்டோரேஜ் கேபாஸிட்டி,12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட்,மற்றும் டியூப்லெஸ் டையர் இருப்பதோடு மட்டுமல்லாமல் எல்.இ.டி. டெயில்லேம்ப் அம்சங்களும் இருக்கின்றன.மேலும் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வசதியும் உள்ளது.
சஸ்பென்ஷன் யூனிட்-ஐ பொருத்த மட்டும் முன்பக்கமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பின்பக்கமாக ஹைட்ராலிக் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் உள்ளது. இதன் மைலேஜ் சிட்டியில் 44.3kmpl வரையும் ஹைவேயில் 48.5kmpl வரையும் மொத்தமாக மைலேஜ் 45.35 kmpl வரை வழங்குகிறது.இந்த புதிய நிறம் மக்களை வெகுவாக கவரும் என நம்பப்படுகிறது.