Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்…! குடும்பத்தோடு போங்க…. ரொம்ப ரொம்ப முக்கியம்…. மக்களுக்கு எடப்பாடி சொன்ன செய்தி …!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மூடும் தருவாயில் மக்களை அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட சொன்னார். அதில் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது, அரசு மருத்துவமனை இருக்கிறது குடும்பத்தோடு போய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் உங்களுடைய அமைச்சரும் தடுப்பூசி போட்டுள்ளார். நானும் போட்டுக்கொண்டேன்,அமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தேவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்கள். இன்றைக்கு உயிர் என்பது முக்கியம் உயிரைக் காப்பதற்காக மத்திய – மாநில அரசுகள் இணைந்து தடையில்லாமல் தடுப்பூசியை போட்டு வருகின்றது. ஆகவே பொதுமக்கள் அத்தனை பேரும் தயவுகூர்ந்து மருத்துவமனைக்குச் சென்று குடும்பத்தோடு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |