கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஜெர்மனியில் மாசு மிகப்பெரிய அளவில் குறைந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஜெர்மனி 2020 ஆம் ஆண்டிற்கான அதன் தேசிய காலநிலை இலக்கை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கால் மூன்று சகாப்தங்களாக இல்லாத அளவிற்கு மாசு மிகப்பெரிய அளவில் குறைய கொரோனா உதவியதாக கூறப்படுகிறது.
ஜெர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில் ,கடந்த ஆண்டு 1990 நிலைகளை விட 41% வாயு மாசு குறைந்வாக இருந்ததாகவும் ,மூன்று சகாப்தங்களாகளுக்கு மேலாக ஒரே ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் காற்று மாசுபாட்டை குறைக்க கொரோனா தொற்று தூண்டியதாக கூறியுள்ளார். அதேசமயம் இதனால் நிம்மதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.