புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சிகள் அனைத்தும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார். தேர்தல் பிரசாரங்களை அவர் கவனிப்பார் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.