Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா பீதி… பள்ளிகளுக்கு விடுமுறை?… தீவிர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தஞ்சை அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் சக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதாக கூறப்படும் நிலையில், பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். கொரோனா பரவல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |