Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றுவந்த சிறைகைதி… திடீரென நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை திருப்பத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பா ஊரணி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் உள்ள சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு முழங்காலில் பிரச்சினை இருந்ததாகவும், அதனால் அதிக வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நீலகண்டன் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |