நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா நடவடிக்கை தொடர்பாக பிரதமர் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
எனவே பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். அரசு வழங்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் ஊரடங்கு என்பது போன்ற வதந்தியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.