பழம்பெரும் நடிகையின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லிசாப்ளின்2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரிஸ். இவர் பழம்பெரும் நடிகையான ஜெயசித்ராவின் மகன் ஆவார்.
இந்நிலையில் இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த 68 வயது உடைய நெடுமாறன் என்பவரிடம் பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரிஸ் அறியவகை இரிடியம் பொருளை தருவதாகவும், அதனை வெளிநாடுகளில் விற்றால் கோடிக்கணக்கில் விலைபோகும் என்றும் கூறி நெடுமாறனிடம் 26 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார்.
அதன்பிறகு போலி இரிடியம் பொருட்களை நெடுமாறனும் கொடுத்து மோசடி செய்துள்ளார். ஆகையால் நெடுமாறன் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.புகாரை விசாரணை செய்யும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.