Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆண்டு வருமானம் ரூ.1000…. எழுத்து பிழையால் ஏற்பட்டது – சீமான் விளக்கம்…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீமானின் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் என வேட்புமனுவில் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்ததாகவும், 2019-2020-ல் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடைய மனைவிக்கு அசையும் சொத்து ரூ.63.25 லட்சம், அசையா சொத்து ரூ.25.30 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆண்டு வருமானம் ரூ.1000 என்று குறிப்பிடப்பட்டிருந்ததில் எழுத்து பிழையால் ஏற்பட்ட தவறு என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |