தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல்-6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதோடு, நேரடி பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தேசிய காங்கிரஸ், ஜனதாதளம், திமுக, அதிமுக, மதிமுக என ஆறு கட்சிகளில் இருந்த இவர் தற்போது ஏழாவது கட்சியாக மக்கள் நீதி மையத்தில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சில மாதங்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் கடைசியாக கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். அப்போது எடப்பாடி அரசு ஆட்சியில் நீட்டிக்க காரணம் திமுக எம்எல்ஏக்கள், கத்திலிருப்பதை அறுப்பாவன் அதிமுக காரன், காதோடு அறுப்பவன் திமுக காரன் என்று விமர்சனம் செய்துள்ளார்.