மாடர்னா தடுப்பூசி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதனை செய்வதற்கான செயலை தொடங்கியுள்ளது.
அமெரிக்கா மருந்து உற்பத்தியாளர் மாடர்னா ,தடுப்பூசியை 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பரிசோதனை செய்ய தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சுமார் 6,750 குழந்தைகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று குறைவாக தான் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் குழந்தைகள் மூலம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக கூறுகின்றனர். ஏற்கனவே அமெரிக்கா ஃபைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதனைக்கு முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.