Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா, அப்பாவுடன் நடிகை அனுஷ்கா… வெளியான புகைப்படம்…!!!

நடிகை அனுஷ்கா அவரது அம்மா , அப்பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் அஜித் ,விஜய் ,சூர்யா ,ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் இவரது துணிச்சலான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது . இதையடுத்து அனுஷ்கா  இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிகரித்தார் .

ஆனால் இதன் பின் அவரால் அவரது உடல் எடையை குறைக்க இயலவில்லை. இதனால் அனுஷ்காவிற்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘நிசப்தம்’ திரைப்படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது  அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .

Categories

Tech |