தலைமுடிக்கு நெய்யை தடவுவதால் முடி உதிர்வை தடுக்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.
நாம் சமையலில் பயன்படுத்தும் நெய்யை தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு ஆச்சரியமான இருக்கலாம் .ஆனால் உண்மையில் நெய்யானது கூந்தலுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்று. விட்டமின் ஏ முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மற்றும் வைட்டமின் டி முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும். நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மையைத் தரக்கூடியது. நெய்யை கூந்தலுக்குப் பயன்படுத்தும் முன்பு எப்படி உபயோகிக்கலாம் என்று பார்க்கலாம். மேலும் இதனால் என்ன பிரச்சினைகள் நீங்கும் என்பதையும் காணலாம்.
நாம் எப்போதும் உச்சந்தலையில் ஈரப்பதமாக வைத்திருப்பதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும்.
2 டீஸ்பூன் நெய் எடுத்து உச்சந்தலையில் மசாஜ் செய்துவிடவும்.
இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் மயிர் கால்களை வலுப்படுத்துகின்றது.
இதில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியின் வளர்ச்சிக்கு நன்மை அளிக்கக் கூடியது.
இது முடிக்கு சிறந்த போஷாக்கு அளிக்கிறது.
முதல் நாள் இரவு உச்சந்தலையில் நெய்யை தடவி மறுநாள் காலையில் தலைக்கு குளித்தால் முடி உதிர்வை தடுக்கலாம்.
இதனால் முடி உதிர்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கிற