Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை “நிலச்சரிவில் 8 பேர் பலி” இதுவரை 95 பேர் மரணம் …!!

நேபாளத்தில் கொட்டி வரும் கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து பெய்கின்றது. இதன் காரணமாக அங்குள்ளபல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கொட்டிய கன மழையால் அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது , 4 பேர் காணாமல் போனதோடு 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப்பணியினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.காணாமல் போனவர்களை தேடும் பணியை தீவிரபடுத்தி வெள்ளத்தில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.நேபாளத்தில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ,  35 பேர் காணவில்லை என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |