தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 40,120 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தினமும் 5 க்கு கொரோணா பதிவான நிலையில், திடீரென்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்