அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மேகன் மெர்கலை தனக்கு பிடிக்காது என்று கூறினாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு அளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தனியார் ஊடக பேட்டியில் அவரிடம், மெர்கல் ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது அரசியலில் அவர் வருவதற்கான அறிகுறியா என்று கேட்டனர்.அதற்கு டிரம்ப், அதை நான் முற்றிலும் வரவேற்கிறேன். அது தனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் டிரம்ப் மேகனை பற்றி கூறுகையில் ,ராஜ குடும்பத்தை பற்றி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என்றும் தனக்கு ராணியை பற்றி நன்றாகவே தெரியும் என்றும் கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மெர்கலை பற்றி குறை கூறியது இது முதல் முறை அல்ல ஏற்கனவே இதே போன்று பேசி இருக்கிறார்.