கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் புதிதாக உருமாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது.
முதன் முதலில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அதற்குப்பின் தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசாகவும், பிரேசில் வகை கொரோனா வைரஸாகவும் ,பிரிட்டன் வகை கொரானா வைரசாகவும் உருமாற்றம் அடைந்தது. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பிலிப்பைன்ஸ் வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பிரிட்டனுக்குள் நுழைந்து விட்டதாக பிரிட்டன் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இரண்டு பேர் இந்த பிலிப்பைன்ஸ் வகை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவரில் ஒருவர் பிலிப்பைன்ஸ்க்கு சமீபத்தில் சென்று வந்துள்ளார் என்றும் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களா என்பது பற்றி தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது .இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.