Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகரின் புதிய திறமை…. இசைஞானி பாராட்டு…!!

பிரபல காமெடி நடிகரின் புதுவித திறமையை இசைஞானி இளையராஜா பாராட்டியுள்ளார்.

கொரோனா காரணமாக உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீட்டில் இருக்கும் பலரும் தங்களது பொழுதுபோக்கை கழிப்பதற்காக பல்வேறு திறமைகலில் களமிறங்கினர். அந்தவகையில் பிரபல காமெடி நடிகரான விவேக்கும் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார்.

மேலும் இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவரிடம் பாராட்டு பெற்றுள்ளார். இது குறித்து விவேக் கூறுகையில், “என் மகன் வாசித்த பியானோவில் நான் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை வாசிக்கப் பழகினேன். அவர் வாசித்த “உன்னால் முடியும் தம்பி” திரைப்படத்தின் “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இசைஞானியை அவரது புதிய ஸ்டூடியோவில் சமீபத்தில் நான் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினேன். மேலும் உங்களால் நான் இப்பொழுது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டேன் என்று கூறி நான் வாசித்த காணொளி படத்தை காட்டினேன். அதனைப் பார்த்த அவர் என்னை மிகவும் பாராட்டினார்.

இசைத்திறமையை வெளிப்படுத்தி இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற நடிகர் விவேக்

இதைத்தொடர்ந்து நான் இதை அடுத்த சந்ததியினருக்கும் தெரியும்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும், ஆட்டோகிராப்பையும் தன்னுடைய புகைப்படத்தில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கேற்றவாறு இசைஞானியும் என்னுடைய ஆசையை நிறைவேற்றி புகைப்படத்தில் “இறையருள் நிறைக” என்று எழுதித் தந்தார் என்று விவேக் கூறியுள்ளார்.

Categories

Tech |