Categories
உலக செய்திகள்

3 இடங்களில் பயங்கர தாக்குதல்.. துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு.. இளைஞர் கைது..!!

அமெரிக்காவில் 3 வெவ்வேறு மசாஜ் பார்லரில் நடந்த வன்முறையில் 6 ஆசிய பெண்கள் உட்பட 8 நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் அட்லாண்டா புறநகரான Acworthஇல் இருக்கும் மசாஜ் பார்லர் ஒன்றில் நடந்த கலவரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இதே நகரில் இருக்கும் மற்ற 2 மசாஜ் பார்லரிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது நடத்தப்பட்ட 3 கலவரத்திலும் இந்த நபர்  மீது சந்தேகம் இருப்பதாக கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கி சூடு குறித்த தகவல் எதுவும் தற்போது வரை தெரியவில்லை.

எனினும் சமீப நாட்களில் அமெரிக்காவில் ஆசிய-அமெரிக்கர்கள் மீது நடத்தப்படும் வன்முறை  அதிகரித்து வருகிறது. அதாவது கொரோனா தொற்று அமெரிக்காவில் பரவுவதற்கு காரணமானவர்கள் ஆசிய மக்கள் தான் என்று வதந்திகள் பரப்பப்பட்டது. இதனால் ஆசிய அமெரிக்கர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் ஆசிய-அமெரிக்கர்கள் தாக்கப்பட்டது கொடூரமான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |